சின்னாளப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் மார்பில் கத்திப் போட்டு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி கீழக்கோட்டை மதுராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி கீழக்கோட்டை மதுராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில், மார்பில் கத்திப்போட்டு வழிபடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக, அம்மன் சாமி கும்பிடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிருந்தாவனத் தோப்பிலிருந்து அம்மனை அலங்கரித்து அசுவ வாகனத்தில் கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் ஊர்வலத்துக்கு முன்பாக தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மார்பில் கத்திபோட்டு வழிபாடு நடத்தினர். 
 அதைத்தொடர்ந்து, பகலில் அம்மனுக்காக ரதிமாவு சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள், பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். 
 விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாங்கர் மகா ஜனசபை நிர்வாகிகள்  செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com