மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்: நடிகர் மன்சூர் அலிகான்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என நடிகரும், நாம் தமிழர் கட்சியின்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என நடிகரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மன்சூர்அலிகான் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் மக்களவைத் தேர்தல் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மண்டல பொறுப்பாளர் சிவசங்கரன் தலைமை வகித்தார். 
ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி தலைவர் மாரி.அன்பழகன், தொகுதிச் செயலர் செல்வராஜ், இளைஞரணி செயலர் ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடிகர் மன்சூர்அலிகான் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும். அதே போல பாரம்பரிய கட்சிகள் எந்த கட்சியுடனும் சேராமல் தனித்துப் போட்டியிடத் தயாரா?  மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளது. 
மேலை நாடுகளில் கூட மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்து விட்டார்கள். எனவே நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறது என்றார்.
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாம் தமிழர்கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மன்சூர்அலிகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கும் பணம். பாமக கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் கொலையை யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது மக்களை ஏமாற்றும் வேலை. கூட்டணி என்பது தேர்தல் முடியும் வரை மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகு தேன்நிலவு முடிந்தது கூட்டணி கலைந்தது என்று கலைத்து விடுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com