நகராட்சிப் பள்ளியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி
By DIN | Published On : 20th February 2019 07:09 AM | Last Updated : 20th February 2019 07:09 AM | அ+அ அ- |

பழனி சண்முகபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் படங்களுக்கு செவ்வாய்க்கிழமை மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் முகாமுக்கு சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இச்செயலுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பலியான வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் சார்பில் செவ்வாய்க்கிழமை மறைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் படத்துக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.