முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
தேர்தல் பிரசாரத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை விதிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 28th February 2019 08:05 AM | Last Updated : 28th February 2019 08:05 AM | அ+அ அ- |

தேர்தல் பிரசாரத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் மக்களைவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் வெளிவரவுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆங்காங்கே தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெறும். அப்போது அதிக சத்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
இதனால் ஏற்படும் இரைச்சலால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிரமம் ஏற்படும். அதே போல 10 மற்றும் 12 வகுப்பு இறுதித் ஆண்டு தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற உள்ளன. எனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் கட்சிகள் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுவத்துவதை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.