முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
மது போதையில் குழந்தைகளை தாக்கிய தந்தை: போலீஸ் விசாரணை
By DIN | Published On : 28th February 2019 08:04 AM | Last Updated : 28th February 2019 08:04 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி. இங்கு மூன்றாவது வார்டு பகுதியில் குடியிருந்து வருபவர் கதிர்வேல். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ரித்திக்ரோஷினி(13) என்ற மகளும், சக்திவடிவேல் (11) என்ற மகனும் உள்ளனர்.
வேலைக்கு செல்லாமல் கதிர்வேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து குடும்பதினருடன் சண்டைபோடுவாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கதிர்வேல் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு குழந்தைகள் இருவரும் உறங்கச் சென்றனர். புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக சீருடைகளை எடுப்பதற்காக குழந்தைகள் இருவரும் தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போதும் அங்கே மது போதையில் இருந்த தந்தை கதிர்வேல் இரண்டு குழந்தைகளையும் கடுமையாகத் தாக்கினாராம். அப்போது செங்கல்லை எடுத்து வீசியதில் மகன் சக்திவடிவேல் பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயக்குடி போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.