இடையகோட்டை அருகே சேவல் சண்டை: 7 பேர் கைது
By DIN | Published On : 04th January 2019 01:16 AM | Last Updated : 04th January 2019 01:16 AM | அ+அ அ- |

இடையகோட்டை அருகே சேவல் சண்டை நடத்திய 7 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மல்லையாபுரம்- குருங்குளம் பகுதியில் புதன்கிழமை சேவல் சண்டை நடைபெறுவதாக இடையகோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சார்பு -ஆய்வாளர் சின்னச்சாமி தலைமையில் சென்ற போலீஸார் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த சீரங்ககவுண்டன்புதூரைச் சேர்ந்த பழனிச்சாமி (59), காளாஞ்சிபட்டி சிவா (29), தேவசின்னாம்பட்டி ராமு (21), சின்னக்குளிப்பட்டி சந்தனவேல் (35), ரவிச்சந்திரன் (37), செல்வராஜ் (43) மற்றும் வேடசந்தூரைச் சேர்ந்த அப்துல்முத்தலிப் (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 சேவல்கள் மற்றும் ரூ.1,400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...