Enable Javscript for better performance
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம்175 ஜிகாவாட் மின் உற்பத்தி இலக்கு: துணைவேந்தர் சு.நடராஜன்- Dinamani

சுடச்சுட

    

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம்175 ஜிகாவாட் மின் உற்பத்தி இலக்கு: துணைவேந்தர் சு.நடராஜன்

    By DIN  |   Published on : 08th January 2019 08:54 AM  |   அ+அ அ-   |    |  

    2022ஆம் ஆண்டு 175 ஜிகா  வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சூரிய சக்தியை இழப்பின்றி சேமிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும் என துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்தார்.
     காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை சார்பில் சூரிய மின் கலத்தின் மேம்பட்ட மாற்றத்திற்கான நானோ கட்டமைப்பை ஆராய்வதற்கான 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. 
    நிகழ்ச்சிக்கு காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழக துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்து பேசியது: உள்நாட்டு பாதுகாப்பு, உணவு, தண்ணீர், எரிசக்தி, அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பு  ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் தன்னிறைவு பெற வேண்டும். இன்றைய சூழலில் சூரிய ஆற்றல், அனல் மற்றும் புனல் மின் நிலையங்கள் மூலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு விடுதலை பெறும்போது அனல் மின் நிலையங்கள் மூலமாக 854 மெகா வாட்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக 1,362 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
    ஆனால், 2018இல் 2.3 லட்சம் மெகா வாட் மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமாகவும், 6,780 மெகா வாட் அணு மின் நிலையம் மூலமாகவும், 1.14  லட்சம் மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், 45ஆயிரம் மெகா வாட் புனல் மின் நிலையம் மூலமாகவும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 
     2014ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான செலவு ரூ.17ஆக இருந்த நிலையில், 2018இல் ஒரு யூனிட் மின் உற்பத்தி ரூ.6.5ஆக குறைந்துள்ளது. இந்த தொகையை மேலும் குறைப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். திறன் ஆற்றல் கொண்ட தொழிலாளர்கள், குறைந்த அளவு மூலப் பொருள்களுடன், அதிக ஆற்றலுடன் மின் உற்பத்தி செய்ய வேண்டும். 
     சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை, ஒளி ஆற்றல் பிரதிபலிப்பை குறைத்து, உட்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்க வேண்டும். 2022ஆம் ஆண்டு காற்றாலை, சூரிய மின் உற்பத்தி,  இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மூலம் 175 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு, சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை இழப்பின்றி சேமிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்றார். 
     நிகழ்ச்சியில் பெங்களுரூ இந்திய அறிவியல் மையத்தின் உயிரி வேதியியல் துறை பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன், தேசிய இயற்பியல் கூடத்தின் முன்னாள் தலைவர் ஜி.பகவான் நாராயணா, காந்திகிராம கிராமியப் பல்கலை. இயற்பியல் துறைத் தலைவர் எம்.சிவராமன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp