கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை'

கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசன் தெரிவித்தார். 


கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசன் தெரிவித்தார். 
திண்டுக்கல்லில் சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் சார்பில் 1,541 பயனாளிகளுக்கு ரூ.21.46 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறான, பொய்யான குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது திட்டமிட்ட சதி. பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வழங்குவதை தாங்கிக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் கிராமங்கள் தோறும் சென்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு திமுக தான் காரணம் என்றார்.
முன்னதாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் உதயக்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 975 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடி, தாலிக்கு தங்கம் 7800 கிராம் ரூ.17.37 கோடி என மொத்தம் ரூ.21.18 கோடியில் திருமண நிதியுதவியும், 50 பயனாளிகளுக்கு தலா ரூ.4,250 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் என மொத்தம் ரூ.2.12 லட்சம் உதவிகள் வழங்கப்பட்டன. தவிர, 508 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25.40 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மொத்தம் 1,541 பயனாளிகளுக்கு ரூ.21.46 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஜீவா, மாவட்ட சமூகநல அலுவலர்(பொ) முத்துமீனாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com