"கொடநாடு தொடர்பாக முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை'

கொடநாடு தொடர்பாக முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

கொடநாடு தொடர்பாக முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி ரத வீதி உலா நடைபெற்றது. அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மண்டகப்படிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனரும், சங்கத்தின் நிறுவனருமான பெ.ஜான்பாண்டியன் தலைமை வகித்தார். 
விழாவுக்குப் பின்னர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: 
கொடநாடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது சுமத்தப்பட்டுள்ள புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை.  இத்தனை நாள் இல்லாத புகார் இப்போது எப்படி வரும். இது முழுக்க, முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டதாகும்.  
அதே போல மத்திய அரசு இத்தனை ஆண்டு காலம் கழித்து தற்போது தேர்தலை மனதில் வைத்தே பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் மக்களைப் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றாமல் அவர்களுக்கு விவசாயம் சார்ந்தவர்கள் என தனிப்பிரிவு ஏற்படுத்தி அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவித்த பின்னர் யாருக்கு ஆதரவு எனத் தெரிவிக்கப்படும் என்றார்.
அப்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிச்சாமி, இமான்சேகர், ஈரோடு மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com