இன்று முதல் ஜன.26 வரை மயிலாடுதுறை ரயில் பகுதியாக ரத்து

திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், ஜனவரி 18 முதல் 26 வரை திண்டுக்கல் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், ஜனவரி 18 முதல் 26 வரை திண்டுக்கல் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  இதுதொடர்பாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தது: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை - அய்யலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் ஜனவரி 18 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
      இதனால், திருநெல்வேலி மயிலாடுதுறை இணைப்பு ரயில் வண்டி எண் 56822 மற்றும் 56821, திண்டுக்கல் - திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
     மேலும் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 24.01.2019 வியாழக்கிழமை ஆகிய நாள்களில் நாகர்கோவில் மும்பை இடையே இயக்கப்படும் வாரம் இருமுறை விரைவு ரயில் வண்டி எண் 16352 காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 8.25 மணிக்கு புறப்படும்.  
    அதேபோல், கோயம்புத்தூர் வரை சேவை நீட்டிக்கப்பட்ட வண்டி எண் 56710 மற்றும் 56709 மதுரை -பழனி - மதுரை பயணிகள் ரயில்களின் இயக்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com