சிறுமலையில் குதிரைப் பொங்கல்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலைப் பகுதியில் குதிரைப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
 திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியில் சிறுமலை புதூர், தென்மலை, அகஸ்தியர்புரம், தாழைக்கிடை, கடமான் குளம், வேளாண்பண்ணை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. சிறுமலை பகுதியிலுள்ள தோட்டங்களில் விளையும் வாழை, பலா, எலுமிச்சை உள்ளிட்ட பொருள்களை பிரதான சாலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு குதிரைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சிறுமலையிலுள்ள 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் 200 குதிரைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், சிறுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குதிரைப் பொங்கல் கொண்டாடினர். ஆண்டு முழுவதும் தங்களுக்கு பொதி சுமந்து உறுதுணையாக இருக்கும் குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், இந்த விழாவுக்கு விவசாயிகள் ஏற்பாடு செய்தனர்.  குதிரைகளை குளிக்க வைத்து, சந்தனம் மற்றும் குங்குமத் திலகமிட்டு வரிசையாக நிறுத்திய விவசாயிகள், வழக்கம்போல் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com