தைப்பூசத் திருவிழாவையொட்டி திண்டுக்கல்-பழனி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில்

பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திண்டுக்கல்- பழனி சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
பழனி தைப்பூசத் திருவிழா ஜன.21ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, திண்டுக்கல்- பழனி சாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் திண்டுக்கல்- பழனி சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை மற்றும் தேனியிலிருந்து செம்பட்டி வழியாக கோவை செல்லும் லாரிகள், செம்பட்டி, திண்டுக்கல், வத்தலகுண்டு புறவழிச்சாலை, பழனி புறவழிச்சாலை, தாடிக்கொம்பு அகரம், இடையக்கோட்டை, கள்ளிமந்தையம், தாராபுரம் வழியாக செல்ல வேண்டும். இதே வழித் தடத்தையே மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல்லிலிருந்து கோவை செல்லும் கார்களும் பயன்படுத்த வேண்டும். 
மதுரையிலிருந்து பழனிக்கு இயக்கப்படும் பயணிகள் பேருந்துகள், திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, புதுதாராபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும். 
 அதேபோல் கோயமுத்தூரிலிருந்து மதுரை செல்லும் லாரிகள் மற்றும் கார்கள், தாராபுரம்  புறவழிச்சாலை, மூலனூர், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் மதுரை 4 வழிச்சாலையை பயன்படுத்த வேண்டும். மதுரையிலிருந்து செம்பட்டி வழியாக ஒட்டன்சத்திரம் கோவை செல்லும் கனரக வாகனங்கள் காமலாபுரம் பிரிவு, சின்னாளப்பட்டி, திண்டுக்கல்- வத்தலகுண்டு புறவழிச்சாலை, தாடிக்கொம்பு, இடையகோட்டை, கள்ளிமந்தையம், தாராபுரம் வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com