பழனியாண்டவர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா
By DIN | Published On : 24th January 2019 12:57 AM | Last Updated : 24th January 2019 12:57 AM | அ+அ அ- |

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் தைப்பூசம் முடிந்த பிறகு மாணவிகள் பங்கேற்கும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் பொங்கல்விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாணவிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கல் இட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் சூரியபகவானுக்கு பொங்கல் படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாணவிகள் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பேரவை துணைத் தலைவர் தமிழ்செல்வி, அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.