பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் முகாம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
 கடந்த 24 ஆம் தேதி முதல் பேரிஜம் பகுதியான வனத்துறை ஓய்வு விடுதியருகே காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்ததை அங்குள்ள வனப்பணியாளர்கள் 2-பேர் பார்த்துள்ளனர். அவர்கள் காட்டு யானைகளை விரட்டுவதற்காக சென்றபோது யானை அவர்களை விரட்டியுள்ளது. இதனால் பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப்  பயணிகள் நலன் கருதி வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை கடந்த 10-நாள்களாக அனுமதிக்கவில்லை. இதனால்  பேரிஜம் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி பாலசுப்பிரமணி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன. அவை வனப் பணியாளர்களையும் விரட்டியுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. யானைக் கூட்டம் பேரிஜம் பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு மாறியவுடன் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com