பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
By DIN | Published On : 05th July 2019 09:40 AM | Last Updated : 05th July 2019 09:40 AM | அ+அ அ- |

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழனி பட்டத்து விநாயகர் கோயில் சாலை படிப்பாறை காளியம்மன் கோயில் எதிரே புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றியத்துக்கான புதிய அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் அடிக்கல் நாட்டி சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் போது ஏராளமானோர் கட்டடம் கட்ட நன்கொடை வழங்கினர். மேலும் கட்டடம் கட்டுவதற்கான குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் கட்டடம் கட்ட பல்வேறு உறுப்பினர்களும் நிதிஉதவி செய்வதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.