சுடச்சுட

  

  பத்ம விருது: கருத்து தெரிவிக்க இன்று ஒரு நாள் வாய்ப்பு

  By DIN  |   Published on : 10th July 2019 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பத்ம விருதுகள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க புதன்கிழமை (ஜூலை 10) ஒரு நாள் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   தேசத்தின் உயரிய அங்கீகாரமிக்க விருதான பத்ம விருதுகள், கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை, கல்வி, மருத்துவம், பொது விவகாரம் போன்ற துறைகளில் நீண்ட நாள்களாக சிறந்த பங்களிப்பினை செய்து வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. பால், இனம், மத பேதமின்றி தேசத்தின் அனைத்து குடி மக்களுக்கும் சம உரிமை தந்து சேவைக்கும், திறமைக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவ்விருது வழங்கப்படுகிறது. எனவே, 2020ஆம் ஆண்டு விருதுக்கான தகுந்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை, கல்வி, மருத்துவம், பொது விவகாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனி நபர்கள், தங்கள் கருத்துக்களை ஜூலை 10 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 88 இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai