வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் திறன் பயிற்சி பெறுவது அவசியம்: ஆட்சியர்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பொருளாதார ரீதியான வளர்ச்சிப் பெறுவதற்கு திறன் பயிற்சி  பெறுவது அவசியம் என

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பொருளாதார ரீதியான வளர்ச்சிப் பெறுவதற்கு திறன் பயிற்சி  பெறுவது அவசியம் என, மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
       தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், தொழில்நெறி மற்றும் திறன் வார விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
       இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, பேரணியை தொடக்கி வைத்துப் பேசியதாவது:  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், கம்பெனி சட்டம் பிரிவு எண் 25-இன் கீழ் லாபம் ஈட்டா கம்பெனியாக 2013 முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், 33-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறைகளில் திறன் பயிற்சிகளை கட்டணமின்றி வழங்கி வருகிறது.      பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு போக்குவரத்து செலவாக நாளொன்றுக்கு ரூ.100 வீதம் வழங்கப்படுகிறது. 
      விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் ஜூலை 2ஆவது வாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு 8.7.2019 முதல் 15.7.2019 வரை தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் குறித்த நிகழ்ச்சிகள் வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் பயிற்சி நிலையம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.      இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பொருளாதார வளர்ச்சிப் பெறுவதற்கு திறன் பயிற்சி பெற முன்  வரவேண்டும். மேலும் விவரங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் உதவி இயக்குநர் திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.  
     பேரணியில் பங்கேற்ற தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள், பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தொழில் நெறி விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறும் சென்றனர்.      இப்பேரணியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் சு. காமேஸ்வரி மற்றும் ரமேஷ், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலர் ஸ்டெல்லா உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com