சுடச்சுட

    

    பேரூராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க செயல் அலுவலர்களுக்கு இலக்கு

    By DIN  |   Published on : 13th July 2019 11:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்வது குறித்து நடைபெற்ற செயல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேரூராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து அதனை பராமரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் உள்ள செயல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    இக்கூட்டத்திற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதை கட்டாயமாக்கவும், அதற்கான கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும் வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் உள்ள குளங்களில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்வது, மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
     முக்கியமாக ஒவ்வொரு பேரூராட்சி பகுதியிலும் பத்து ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்ய செயல் அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai