சுடச்சுட

  

  ஈரோடு ரயில் நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர்: கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை

  By DIN  |   Published on : 14th July 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஈரோடு ரயில் நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
  இதுகுறித்து பிரதமர், தமிழக முதல்வருக்கு கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தில் விவசாய குடும்பத்தில் 1756 ம் ஆண்டு பிறந்து நாட்டின் விடுதலைக்கு போராடி, உயிர் நீத்தவர் மாவீரர் தீரன் சின்னமலை.  தீர்த்தகிரி சர்க்கரை என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை தொலை நோக்கு சிந்தனையோடு வியூகம் அமைத்து, திப்பு சுல்தானுடன் கூட்டணி வைத்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார். இதைத் தொடர்ந்து 1805 ஆம் ஆண்டு ஜுலை 31இல் சங்ககிரி கோட்டையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்டார். 
  அவரை கவுரவிக்கவும், சுதந்திரத்தின் அருமையையும், தேசபற்றையும் வருங்கால இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் ஆடி 18 இல் அவரது நினைவு தினத்தில்  ஈரோடு ரயில் நிலையத்திற்கு  அவரது பெயரை சூட்ட வேண்டும். மேலும் அவரது வரலாற்றை வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடங்களிலும் சேர்க்க வேண்டும். இவ்வறிப்பை நடப்பு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைக் கூட்ட தொடரிலேயே அறிவிக்க வேண்டும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai