சுடச்சுட

  

  தட்கல் முன்பதிவில் முறைகேடு: கொடைரோட்டில் ஒருவர் கைது

  By DIN  |   Published on : 14th July 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தட்கல் முன்பு பதிவு மூலம் ரயில் பயணச்சீட்டு பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர்.
  திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைரோடு, பழனி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.  இந்நிலையில், தட்கல் முன் பதிவில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரின்பேரில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட ரயில்வே பாதுகாப்பு படை மதுரை கோட்ட ஆணையர் ஜெகநாதன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கடந்த ஒரு வார காலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கொடைரோடு ரயில் நிலையத்தில் சட்டவிரோதமாக தட்கல் முறையில் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்து விற்பனை செய்த ஒருவரை தனிப் படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், கொடைரோடு அடுத்துள்ள ஜெகநாத புரத்தைச் சேர்ந்த மாயாண்டி(50) என்பது தெரிய வந்தது. 
  இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார் கூறுகையில், தட்கல் முன் பதிவை முறைகேடாக பயன்படுத்தி, பயணச்சீட்டுகளை விற்பனை செய்து வந்த மாயாண்டி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களில், இதுபோன்று தட்கல் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்பனை செய்த 3 பேர் பிடிபட்டுள்ளனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai