நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 24th July 2019 06:49 AM | Last Updated : 24th July 2019 06:49 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கும் இக் கூட்டத்தில், கடந்த ஜூன் மாத கூட்டத்தின்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளார்.