Enable Javscript for better performance
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குஅடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முற்றுகை

    By DIN  |   Published on : 25th July 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அலுவலகங்களில் நவீன கழிப்பறை, லிப்ட் உள்ளிட்ட வசதிகள் செய்துதரக் கோரி புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
     தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.செல்வநாயகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலர் எஸ்.பகத்சிங் கலந்து கொண்டார். 
     இதனிடையே, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயலர் பகத்சிங் கூறியது: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்ட், நவீன கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனையின்றி வங்கி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai