Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் அருகே கொதிக்கும்பால் கொட்டி காயமடைந்த சிறுமி பலி- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் அருகே கொதிக்கும் பால் கொட்டி காயமடைந்த சிறுமி பலி

    By DIN  |   Published on : 25th July 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் அருகே கொதிக்கும் பால் கொட்டியதில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
    ஈரோடு அடுத்துள்ள கனகபுரம் பெருமாள்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (35). இவரது மனைவி செல்வபிரதிபா (29). இவர்களுக்கு 3 வயதில் கவிஸ்னா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வபிரதிபாவின் தந்தை இறந்து விட்டதால், இறுதிச் சடங்கிற்காக ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டிக்கு மூவரும் வந்துள்ளனர். 
    இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி செல்வபிரதிபா உறவினர்களுக்கு காபி போட பால் காய்ச்சிக் கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த சிறுமி கவிஸ்னா எதிர்பாராமல் பாத்திரத்தை தட்டி விட்டதில் கொதிக்கும் பால் அதன் உடலில் பட்டது. இதில் குழந்தை பலத்த காயம் அடைந்தது. இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கவிஸ்னா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
     இதுகுறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் செல்வபிரதிபா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai