Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் தேங்கிக் கிடக்கும்மண் குவியலால் விபத்து அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் தேங்கிக் கிடக்கும் மண் குவியலால் விபத்து அபாயம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் தேங்கிக் கிடக்கும் மண் குவியலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
     திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை வேடசந்தூர் பிரிவு அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் 2 பக்கங்களிலும் மண் குவியல் குவியலாக தேங்கிக் கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் குவித்து கிடக்கும் மண் மீது ஏறும் போது எதிர்பாராமல் வழுக்கி சாலையில் விழும் சூழ்நிலை உள்ளது. 
    அதே போல மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில்அதிக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லவில்லை என்றால், தேங்கிக் கிடக்கும் மண்ணில் வழுக்கி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. 
    எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் தேங்கிக் கிடக்கும் மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai