Enable Javscript for better performance
கொடைக்கானலில் பாரதிய கிசான் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் பாரதிய கிசான் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் பெருமாள்மலையில் பாரதிய கிசான் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் கொடைக்கானல் மலைப்பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவதை தடுக்கக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     பெருமாள்மலை- பழனிப் பிரிவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அசோகன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது 25-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    இது குறித்து பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலர் அசோகன் பேசியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் காட்டுயானைகள் முகாமிட்டு விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறோம். இதுவரை 4 பேர் காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இது வரைமுழுமையான நிதி உதவி கிடைக்கவில்லை. மேலும் காட்டு யானைகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி விவசாயத் தோட்டத்திற்குள் வராமல் தடுக்க வனத் துறையினர்  மின்வேலி அமைக்க வேண்டும் விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காவிட்டால் விரைவில் கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai