Enable Javscript for better performance
திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து32 மாணவர்கள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் புதன்கிழமை காயமடைந்தனர்.
    திண்டுக்கல் அடுத்துள்ள முள்ளிப்பாடி பகுதியில் தனியார் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பாடியூர், மோளப்பாடியூர், எட்டிக்குளத்துப்பட்டி, இ.புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த  மாணவர்களை அழைத்து வருவதற்காக தனியார் வேன்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
    இந்நிலையில், இ.புதூர், எட்டிக்குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பாடியூர் செல்லும் சாலையில் அந்த பள்ளி வேன் புதன்கிழமை சென்று  கொண்டிருந்தது. வேனை பாண்டீஸ்வரன் (37) என்பவர் ஓட்டிச் சென்றார். அங்குள்ள பட்டாளம்மன்கோயில் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை அடுத்து, வேனிலிருந்த மாணவர்களின் அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
    வேனில் 40 பேர் பயணித்த நிலையில், ஓட்டுநர் பாண்டீஸ்வரன் (37), மோளப்பாடியூரைச் சேர்ந்த ஹாசினி (6), தாரணி (7), தாரணீஷ் (6), விமல் (4), விஷ்ணுப்பிரியா (5), எட்டிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த பானுமதி (13), பிரசாத் (13) உள்ளிட்ட 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வடமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai