Enable Javscript for better performance
பாசனத்துக்காக பழனி வரதமாநதி அணை திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பழனியை அடுத்த வரதமாநதி அணைக்கட்டு பாசனத்துக்காக புதன்கிழமை   திறக்கப்பட்டது.
    பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வரதமாநதி அணைக்கட்டு.  தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையிலும் அணையில் பாதிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.  
    இந்நிலையில் ஆயக்குடி மற்றும் வையாபுரி குளத்தின் நீரைக் கொண்டு நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பாசனத்துக்காக அணையை திறக்க கோரிக்கை விடுத்திருந்தனர். 
    இதையடுத்து சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வரதமாநதி அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து புதன்கிழமை வரதமாநதி அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டது. 66 அடி உயரமுள்ள அணையில் தற்போது சுமார் 41 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளர் கண்ணன் மற்றும் ஆயக்குடி விவசாய சங்க தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    இந்த நீர் திறப்பின் மூலம்  வரதமாநதி அணைக்கு கட்டுப்பட்ட ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரியவாய்க்கால் மற்றும் பழனி  வையாபுரி வாய்க்கால் பாசனத்திற்கு ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளுக்கு வினாடிக்கு 75 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 
    மேலும், நீர் இருப்பைப் பொருத்து பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai