Enable Javscript for better performance
பிரசவத்தில் இளம் பெண் பலி: குழந்தையை உயிருடன் மீட்ட மருத்துவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பிரசவத்தில் இளம் பெண் பலி: குழந்தையை உயிருடன் மீட்ட  மருத்துவர்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர்.
     திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள மல்லநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி திருப்பதி (27). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருப்பதி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், உடல் நலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலுள்ள மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு புதன்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மகப்பேறு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முற்பட்டபோது, திருப்பதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வயிற்றிலுள்ள குழந்தையை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 
    அறுவை சிகிச்சை மூலம் 2.5 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, திருப்பதியின் உடல் நிலை மேலும் மோசமடைந்து, பிற்பகலில் அவர் உயிரிழந்தார். பிரசவத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai