Enable Javscript for better performance
"பிரேக்' பிடிக்காமல் ஓடிய அரசுப் பேருந்து: சக்கரங்களுக்கு அடியில் கற்களை வீசி நிறுத்திய இளைஞர்கள்- Dinamani

சுடச்சுட

    

    "பிரேக்' பிடிக்காமல் ஓடிய அரசுப் பேருந்து: சக்கரங்களுக்கு அடியில் கற்களை வீசி நிறுத்திய இளைஞர்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்லில் "பிரேக்' பிடிக்காமல் ஓடிய அரசுப் பேருந்தை, கற்களை சக்கரங்களுக்கு அடியில் வீசி இளைஞர்கள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டிக்கு அரசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்து, பேகம்பூர் நோக்கி சென்றபோது "பிரேக்' பிடிக்காததால் ஓட்டுநரால் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த பகுதியில் நின்ற இளைஞர்கள்  பெரிய அளவிலான கற்களை தூக்கிச் சென்று பேருந்தின் டயருக்கு அடியில் வீசினார். சிறிது நேர முயற்சிக்குப் பின் அந்த பேருந்து நிறுத்தப்பட்டது. 
    இதனை அடுத்து, பேருந்திலிருந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டு, அந்த பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. "பிரேக்' பிடிக்காமல் பேருந்து வந்தபோது, யாரும் குறுக்கே செல்லாதததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்து "பிரேக்' பிடிக்காமல் சென்றது, கற்களை தூக்கிப் போட்டு நிறுத்தியது உள்ளிட்ட காட்சிகளை செல்லிடப்பேசியில் பதிவு செய்த சிலர், சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சிகளால் சுமார் 24 மணி நேரத்திற்கு பின் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேருந்து நிலையத்திலிருந்து இயக்கும்போதே "பிரேக்'கை சரிபார்த்திருக்க வேண்டும். அதேபோல் பணிமனை ஊழியர்களும் சரியாக பரிசோதித்திருக்க வேண்டும். எதிர்பாராமல் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் குறித்து பணிமனை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai