Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு கூட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நகர் குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.  மாவட்டச் செயலர் சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். 
    கூட்டத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும். மேலும், குலக் கல்வியை மீண்டும் கொண்டு வர முயல்கிறது. 
    எனவே, புதிய கல்விக் கொள்கையை நிறுத்தக் கோரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி, தென் சென்னை மாவட்டச் செயலர் பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்கும் தெருமுனைக் கூட்டங்களை பழனி நகரில் மின்வாரிய அலுவலகம், பட்டத்து விநாயகர் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
    மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துவதன் அடிப்படையில், பழனி நகரில் 25 ஆயிரம் கையெழுத்துகளை வீடு வீடாகச் சென்று வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai