முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
அடுக்கம் ஊராட்சியில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
By DIN | Published On : 30th July 2019 09:08 AM | Last Updated : 30th July 2019 09:08 AM | அ+அ அ- |

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அடுக்கம் ஊராட்சி சார்பில் மழை நீர் சேமிப்பு, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊர்வலமானது பெருமாள்மலை, அடுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வீரமணி, தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வம், கிராம மக்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மழைநீர் சேமிப்பு, ஊர் குளங்கள் தூர்வாருதல், நீர் பெருக்கி ஊர் காக்க சபதம் ஏற்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கோஷமிட்டு மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.