முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கிராம கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 09:10 AM | Last Updated : 30th July 2019 09:10 AM | அ+அ அ- |

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட கிராமகோயில் பூசாரிகள் பேரவை சார்பில் சங்கு ஊதி மணி அடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பூசாரிகள் பலரும் சங்கு ஊதியபடி மணிஅடித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இது குறித்து மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி கூறுகையில், அனைத்து கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் அரசு இலவச வீடு கட்டித் தர வேண்டும். வயது முதிர்ந்த கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். வருமான வரிச்சான்றை ரூ. 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
பூசாரிகளுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் கோரிக்கையை செப். 31ஆம் தேதிக்குள் நிறைவேற்றா விட்டால் மாநில அளவில் மாநாடு நடத்தி அரசுக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்ய உள்ளோம் என்றார்.