தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை: பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பூரண மதுவிலக்கு பெண்களின் விடுதலைக்கு முதல் தீர்வு என்ற தலைப்பில் மே தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாலை மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.திவ்யா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் எம்.ஜீவா முன்னிலை வகித்தார். தொழிற்சங்க ஆலோசகர் எஸ்.ஜேம்ஸ் விக்டர் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மதுபாட்டில்களை உடைத்து மதுபானத்தை குப்பைக் கிடங்கில் ஊற்றிய பெண்கள், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோஷமிட்டனர். 
இதுதொடர்பாக பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் எஸ்.திவ்யா பேசியது: தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் தொடர்ந்து பொய்த்து வரும் நிலையில், பல பெண்கள் மாற்றுத் தொழிலாக பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளையே மாற்று வாழ்வாதாரமாக நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலிலும், தமிழகத்தில் பரவலாக செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளால், பெண்களின் வருமானத்தையும் ஆண்கள் மது குடிப்பதற்கு பறித்து விடுகின்றனர். மேலும் மதுபானக் கடைகளினால் கிராமப்புற பொருளாதாரமும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 
ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்த அதிமுக அரசு, அதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு  அமல்படுத்த வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com