சுடச்சுட

  

  ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதியதில் கூலித்தொழிலாளி  உயிரிழந்தார்.
    ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் மகன் சிவனேசன் (34). இவர் திண்டுக்கல்லில் வழக்குரைஞர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் வியாழக்கிழமை திண்டுக்கல்லில் இருந்து சொகுசு காரில் சிவனேசன் மற்றும் நண்பர் செல்லமுத்து ஆகிய இருவரும் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தனர். காரை சிவனேசன் ஓட்டியுள்ளார்.
    ஒட்டன்தத்திரம்-திண்டுக்கல் சாலையில் லெக்கையன்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த லெக்கையன்கோட்டை ஏடி காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுச்சாமி (55) மற்றும் காந்திநகரைச் சேர்ந்த குணசேகரன் (64) ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்தகாயம் அடைந்தனர். ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  சிவனேசனைக் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai