ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை
By DIN | Published On : 19th June 2019 07:38 AM | Last Updated : 19th June 2019 07:38 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், ஈரோடு, கோவை, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை இறங்கி விட்டுச் செல்கின்றன. இதனால், இப்பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் காணப்படும்.
இதை சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள், பெண்களிடம் தவறாக நடக்கும் நபர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், அவ்வப்போது குற்றச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
எனவே, இப்பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.