100 நாள் வேலை திட்டம்: ஒரே நாளில் 22 கிராம ஊராட்சிகளில் அதிகாரிகள் ஆய்வு

ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை ஒரே நாளில் 100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை ஒரே நாளில் 100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், அக்கரைப்பட்டி, காந்தி கிராமம், அம்பாத்துரை, வக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம், சீவல்சரகு, மணலூர், சித்தரேவு, போடிக்காமன்வாடி, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. ஆனால், இது குறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டதோடு, பயனாளிகள் வருகைப் பட்டியல், வங்கி தொடர்புள்ள ஆவணங்களை ஒப்பீடு செய்தல், தனியார் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் தனியார் ஆலைகளில் வேலைபார்க்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பெயரில் போலிலியாக வருகைப்பதிவு செய்திருப்பதையும் ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவிட்டார். மேலும், இது குறித்த ஆய்வறிக்கையை   சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பாளையங்கோட்டை ஊராட்சியில் உதவித் திட்ட அலுவலர் பொன்னம்மாள் தலைமையில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதேபோல், போடிக்காமன்வாடியில் உதவிச் செயற்பொறியாளர் தலைமையிலும், முன்னிலைக்கோட்டையில் உதவித் திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு- 2) தலைமையிலும், பிள்ளையார்நத்தம் ஊராட்சிப் பகுதியில் உதவி இயக்குநர் கங்காதரணி (தணிக்கை) தலைமையிலும், பித்தளைப்பட்டி ஊராட்சியில் உதவிச் செயற்பொறியாளர் தலைமையிலும், அக்கரைப்பட்டியில் உதவித் திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு -1) தலைமையிலும், ஆத்தூரில் உதவிச் செயற்பொறியாளர் தலைமையிலும் என ஒரே நாளில் 22 ஊராட்சிகளிலும் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com