விளையாட்டுத் துறைக்கான பத்ம விருது: ஜூன் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு துறை சார்பில் பத்ம விருது பெற தகுதியானவர்கள் ஜூன் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறை சார்பில் பத்ம விருது பெற தகுதியானவர்கள் ஜூன் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) கா.சுப்புராஜ் தெரிவித்துள்ளது:
 2020ஆம் ஆண்டிற்கான பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளன. இதில் விளையாட்டுத் துறை சார்பில் பத்ம விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் அனைத்தும்    ‌w‌w‌w.‌p​a‌d‌m​a​a‌w​a‌r‌d‌s.‌g‌o‌v.‌i‌n  என்ற  இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் என குறிப்பிட்டு ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
 மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல் 624004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
    இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com