கணினி ஆசிரியர்கள் தேர்வு: 208 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 24th June 2019 07:10 AM | Last Updated : 24th June 2019 07:10 AM | அ+அ அ- |

முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக ஆன்-லைன் மூலம் நடைபெற்ற தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 208 பேர் பங்கேற்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்-லைன் மூலம் இத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 221 பேர் இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இத்தேர்வுக்காக, திண்டுக்கல் முத்தனம்பட்டியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 221 பேரில் 208 பேர் கலந்துகொண்டனர்.