கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் திறன் வளர்ப்பு பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்,

கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், ஜூன் 24 முதல் 28ஆம் தேதி வரையிலும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளதாவது:  
மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட அலுவலகத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி (தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல்ய யோஜனா) வழங்கப்ப்பட்டு வருகிறது. 
கிராமப்புறங்களில் உள்ள 18 முதல் 35 வயதுக்குள்பட்ட இருபாலருக்கும், ஆயத்த ஆடை தயாரித்தல், நூல் கோன் தயாரிப்பு, கணினி பயிற்சி, வீட்டு உபயோக மின்பொருள்கள் பழுதுபார்த்தல், இருசக்கர வாகனம் பழுது நீக்கல், பொது சேவை உதவியாளர் (செவிலியர்) பயிற்சி, சி.என்.சி. (லேத் ஆபரேட்டர்) இயந்திரம் இயக்குபவர், உடற்கல்வி உதவியாளர்,  விற்பனையாளர் பயிற்சி, உணவு மற்றும் குளிர்பான தொழில்நுட்பம், ஒப்பந்த அடிப்படையில் வணிக செயல்முறைகள் (பி.பி.ஒ), சேமிப்பு கிடங்கு மேற்பார்வையாளர், இளநிலை இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் டெக்னீசியன் மற்றும் அழகு கலை போன்றவற்றுக்கானபயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.
தங்குமிடம், உணவு மற்றும் அரசு சான்றிதழுடன் திறன் வளர்ப்பு பயிற்சியும், பயிற்சி முடிவில் 100 சதவீத வேலைவாய்ப்பும் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
தகுதிகள்: கிராமப்புறங்களில் வசிப்பவர், சுய உதவிக்குழு உறுப்பினர் குடும்பத்தை சார்ந்தவர், தேசிய ஊரக வேலை அட்டை உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள  குடும்பத்தைச் சார்ந்தவர் இப்பயிற்சி திட்டத்தில் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் 24.6.2019 முதல் 28.6.2019 ஆம் தேதிக்குள் தங்களுக்கு தேவைப்படும் பயிற்சி விவரம் குறித்த தகவலுடன் கூடிய சுய விண்ணப்பம் மற்றும் படிப்பு சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் வழங்கி பயன்பெறாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com