"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: ஜூலை 2 வரை விண்ணப்பிக்கலாம்'

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஜூலை 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஜூலை 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) சுப்புராஜ் தெரிவித்துள்ளதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்குள்பட்ட தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த விருதுடன் ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15-8-2019 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.  இதற்கு, 15 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 
எனவே, 1-4-2018 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31-3-2019 அன்று 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-19)  மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அந்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  W​W​W.​S​D​A​T.​T​N.​G​O​V.​IN  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். நகல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 2-7-2019-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள மாவட்ட விளையாட்டரங்கம் அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு இது தொடர்பான விவரங்களை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com