சுடச்சுட

  

  கொடைக்கானலில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை, நெடுஞ்சாலைத் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
  கொடைக்கானலில் மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், உகார்த்தே நகர், வெள்ளி நீர்வீழ்ச்சி, தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வியாபாரக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
  சில மாதங்களுக்கு முன், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், யாரும் தானாக முன்வந்து கடைகளை அகற்றவில்லை. எனவே, அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு நேரில் சென்றும், ஒலிபெருக்கி மூலமாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு எச்சரித்தனர். இதில் ஒரு சிலர் தங்களது கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகளை, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில், நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். காவல் துறை பாதுகாப்புடன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் விஜயகுமார், வட்டாட்சியர் வில்சன், மின்வாரிய உதவிச் செயற் பொறியாளர் மேத்யூ என 30-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். கல்லறைமேடு அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, கடைகளின் உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
  காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்துபோகச் செய்தனர். அதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 
  தொடர்ந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai