சுடச்சுட

  

  திண்டுக்கல்லில் ஜூன் 28 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  By DIN  |   Published on : 26th June 2019 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.
  இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 28 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெறும் முகாமில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் சுய விவரக் குறிப்புடன் கலந்து கொள்ளலாம்.  மேலும் மத்திய அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திறன் ஏய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்துகொள்ளலாம். 
  அதேபோல் முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்கள் விவரம் மற்றும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின்  விவரங்களை 0451-2461498 என்ற எண்ணில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai