சுடச்சுட

  

  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வியாழக்கிழமை சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  செம்பட்டியை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (47). இவர், வியாழக்கிழமை செம்பட்டியில் உள்ள பழைய சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
  அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ராஜாவை வழிமறித்து, அவர் வைத்திருந்த ரூ.1,250-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
  இந்நிலையில், ராஜாவின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பொதுமக்கள், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
  பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியதில், அவர்கள் பழனி முல்லை நகரைச் சேர்ந்த சத்தீஸ்வரன் (27), மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் செம்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய பழனியைச் சேர்ந்த துர்க்கைராஜனை தேடி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai