Enable Javscript for better performance
ரயில் மறியலுக்கு முயற்சி: பார்வார்டு பிளாக் கட்சியினர் 80 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரயில் மறியலுக்கு முயற்சி: பார்வார்டு பிளாக் கட்சியினர் 80 பேர் கைது

    By DIN  |   Published on : 16th March 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற பார்வர்டு பிளாக் கட்சியினர் 80 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
       மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
      இதனை வலியுறுத்தி திண்டுக்கலில் பார்வார்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் ரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். 
        ரயில் நிலையம் முன்பு, மறியலில் ஈடுபட முயன்ற 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai