"கருத்து திணிப்புகளை தேர்தல் வெற்றி மூலம் பொய்யாக்குவோம்'

கருத்து திணிப்புகளை தேர்தல் வெற்றி மூலம் பொய்யாக்குவோம்  என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

கருத்து திணிப்புகளை தேர்தல் வெற்றி மூலம் பொய்யாக்குவோம்  என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் வேட்பாளராக ஜோதிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கான நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தலைமை வகித்தார்.  அதிமுக மாவட்டச் செயலர் வி.மருதராஜ் முன்னிலை வகித்தார். இதில், அதிமுக,  பாமக, தேமுதிக, பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 
கூட்டத்திற்குப் பின் அமைச்சர் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது அதிமுக தலைமையில் பலமான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பாமக வேட்பாளர்  3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், நிலக்கோட்டை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெறுவார்கள். 
 இரட்டை இலையை பெற்றுக் கொடுத்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், கூட்டணி கட்சி வேட்பாளரையும் அதிமுகவால் வெற்றி பெற வைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவே பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக வழியில், பாமகவிலும் சாதாரண தொண்டர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   நடுநிலையோடு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே  நேரத்தில், சிலரை சார்ந்துள்ள  ஊடகம் வெளியிடும் கருத்து திணிப்புகளை தேர்தல் வெற்றியின் மூலம் பொய்யாக்குவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com