தேர்தல் நடத்தை விதி: கோவை பெண்ணிடம்  ரூ.1.15 லட்சம் பறிமுதல்

பழனியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.15 லட்சம் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 

பழனியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.15 லட்சம் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
பழனி பை-பாஸ் சாலையில் புதன்கிழமை இரவு கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் தலைமையிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவினர்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.1.15 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. 
விசாரணையில், காரில் வந்த பெண் கோவை வடவள்ளியைச் சேர்ந்த கீதாமகேஸ்வரி எனத் தெரியவந்தது. இவர் தனக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்தது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த நபரிடமிருந்து பணத்தை பெற்றுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். 
ஆனால், அதற்குரிய  ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே, பணத்தை பறிமுதல் செய்த 
அதிகாரிகள்,  ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவரிடம்  அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com