Enable Javscript for better performance
அதிமுக - பாஜக கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரமுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஊழலற்ற ஆட்சி மத்தியில் தொடரவேண்டும். 
    அதே போல தமிழகத்திலும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரவேண்டும். ஆகையால் வரவுள்ள மக்களவைத் தேர்தலிலும்,  சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. 
    மேலும் தேர்தலின் போது பிராமணர் சங்கம் களப்பணியாற்றும் என அதில் தெரிவித்துள்ளார். மேலும், சங்கத்தின் ஆதரவு கடிதத்தை பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜாவிடம் நேரில் சென்று வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai