Enable Javscript for better performance
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள்  ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றன. இதனால்  பேருந்து நிலைய வாயில்களிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பேருந்துநிலையப் பகுதி, அண்ணாசாலை, உட்வில்சாலை ஆகியப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பேருந்து நிலையத்திற்குள் தனியார் சுற்றுலா வாகனங்கள், வெளியூர் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி பேருந்து ஓட்டுநர்களுக்கும், தனியார் வாகன ஓட்டுநர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
    இந்நிலையில் தனியார் வாகனங்கள் பேருந்து நிலையத்தில் அதிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டதால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வரமுடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தன. இதனால் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.  இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து பேருந்து ஓட்டுநர்களிடமும், தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர்களிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் சீரானது. 
    கொடைக்கானல் பேருந்து நிலையத்தில்  பகல் நேரங்களில் மட்டுமாவது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு தனியார் வாகனங்களை நிறுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai