Enable Javscript for better performance
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 26 மனுக்கள் ஏற்பு: 2 மனுக்கள் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 26 மனுக்கள் ஏற்பு: 2 மனுக்கள் தள்ளுபடி

    By DIN  |   Published on : 28th March 2019 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அளிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 26 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
     திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இதனை அடுத்து, இத்தொகுதியில் போட்டியிடும் திமுக, பாமக, அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  
    வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்ததையடுத்து, வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் முன்னிலையில் நடைபெற்ற பரிசீலனையின்போது, திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்திருந்த அவரது மனைவி பரமேஸ்வரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல், சுயேச்சையாக போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட ஜெயசக்திவேல் என்பவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக, பாமக, அமமுக வேட்பாளர்கள் உள்பட 26 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 
    தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் குறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், திமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால், அக்கட்சியின் வேட்பாளருக்கான மாற்று வேட்பாளரின் மனு பரிசீலனையின் போது தானாக நிராகரிக்கப்பட்டு விட்டது. 
    பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கான மாற்று வேட்பாளர்கள் சுயேச்சையாகவே கருதப்படுவார்கள். அதனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 
    அந்த மனுக்களை வேட்பு மனு திரும்ப பெறுதலின் போது, சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai