Enable Javscript for better performance
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர்கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி புதன்கிழமை ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
     அவர் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட லெக்கையன்கோட்டை, புது அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, வெரியப்பூர், கேதையுறும்பு, பழையபட்டி, முத்துநாயக்கன்பட்டி,புலியூர்நத்தம், கோடாங்கிப்பட்டி, புளியமரத்துக்கோட்டை, இடையகோட்டை, வலையபட்டி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலர் சி.ராஜாமணி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலர் இரா.ஜோதிஸ்வரன், திமுக நகரச் செயலர் ப.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலர் தி.தர்மராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai